5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது

5000 ஆண்டுகளுக்கு முந்தைய
ஓவியங்கள் விழுப்புரம் மாவட்டத்தில்  கண்டுபிடிக்கப்பட்டது

சிறுவாலை பாறை ஓவியம்!





விழுப்புரத்தை அடுத்த சிறுவாலை என்ற கிராமத்தில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல் பழங்கால ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் வரலாற்றுக்கு முந்திய கால மனிதர்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கற்கால மனிதர்களின் கலை உணர்வையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் வாழ்க்கை முறையையும் சித்தரிக்கும் இம்மாதிரியான தொல்பழங்கால ஓவியங்கள் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, செத்தவரை போன்ற இடங்களில் கிடைத்த ஓவியங்கள் தனிச் சிறப்புக்குரியவை. அவற்றின் காலம் கி.மு 3000 முதல் கி.மு 7000 வரை என அறிஞர்கள் கருதுகின்றனர்.


அதைப்போன்ற தொல் பழங்கால ஓவிய தொகுதி ஒன்று விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் அடுத்த சிறுவாலையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 “5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஓவியம் 11/2 மீட்டர் நீளமும், 50 செ.மீ. அகலமும் கொண்டது. பொதுவாக இம்மாதிரியான ஓவியங்கள் வெள்ளை மற்றும் காவி நிறத்தில் இருக்கும். இது காவி நிறத்தில் சற்றே தெளிவற்ற நிலையில் உள்ளது.

இது ஒரு இனக்குழு தலைவி, வேட்டையாடிய பின் தன் வீரர்களுடன் வேட்டையாடிய உணவுகளைத் தமது இருப் பிடத்துக்கு இரண்டு வண்டிகளில் எடுத்துச் செல்வதுபோல அமைந் துள்ளது.

இது ஒரு சடங்கை உணர்த்து வதாகவோ, வேட்டையாடுதலை உணர்த்துவதாகவோ கூட இருக் கலாம். இதுவரை கிடைத்துள்ள தொல்பழங்கால ஓவியங்களைவிட, இதில் இரண்டு சக்கரங்களையும் வண்டியையும் தெளிவாக வேறுபடுத்தி அறியமுடிகிறது.

இது புதிய கற்கால, பெருங்கற் கால வேட்டை சமூக மக்களின் நாகரிக வளர்ச்சியைச் சுட்டும் முக்கிய ஆதாரம்” 

மற்றொரு ஆய்வாளரான செல்வன், “இங்கே கிடைத்துள்ள பிற தடயங்களையும் பார்க்கும்போது, ​​இங்கு கற்கால மனிதர்கள் முதல் பல்வேறு சமூகங்கள் இங்குள்ள குகை, குன்றுகளில் வாழ்ந்திருப்பதை அறியமுடிகிறது. மேலும் இப்பகுதியில் தேடினால் இன்னும் நிறைய வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம்.

கல்குவாரிகளால் பல அரிய தொல்சின்னங்கள் அழிந்து போயிருக்கின்றன. அது பிழைத்தது அதிர்ஷ்டவசமானது.

தொல்சின்னங்கள் மீது கவனம் கொண்டு அரசு காப்பாற்ற வேண்டும். பொதுமக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் இவற்றைக் காப்பாற்ற முடியும்.
Thank you for supporting me😊🙏

Comments

Popular posts from this blog

ஸ்ரீ கனகாம்பிகா சமேதா ஸ்ரீ மத்யநாதேஸ்வர சுவாமி கோயில், திருப்பாலபந்தல், திருகோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

கடலுக்கு அடியில் இருக்கும் தமிழனின் வரலாறு குமரிக்கண்டம் (kumari kandam) & Lemuria

'கீழ்வாலை பாறை ஓவியங்கள் சிந்து சமவெளி பண்பாட்டை குறிப்பிடுபவை'.