Posts

Showing posts from July, 2020

பூமிக்கு அடியில் புதைந்து இருக்கும் அதி தமிழனின் வரலாறு( கீழடி )

Image
 அகழ்வாராய்ச்சி:- சிந்து,கங்கைநதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா். கீழடி அகழ்வாராய்ச்சி உட்புறக் காட்சி சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு,தாயக்க...

இல்லுமினாட்டி (Illuminati) யார் இந்த இல்லுமினாட்டி(what is illuminati)

Image
இல்லுமினாட்டி (Illuminati)  இல்லுமினாட்டி   (லத்தின் வார்த்தையான   இல்லுமினட்டஸ்   இன் பன்மை, "தெளிவூட்டுதல்" என்று பொருள்) என்பது வரலாறு சார்ந்த உண்மையான மற்றும் கற்பனையான குழுக்களை குறிப்பிடும் பெயர் ஆகும். வரலாற்று ரீதியாக இது, பவரிய இல்லுமினாட்டி குழுவை குறிக்க பயன்படுகிறது. இது மே 1, 1776 அன்று கண்டறியப்பட்ட தெளிவடைந்த கால   இரகசிய சமூகம்   ஆகும். தற்போது இது வெளிப்படையாகக் கலகம் செய்யக்கூடிய அமைப்பைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது நிழலான "ஆற்றலாக அதிகாரவர்க்கத்துக்கு பின்னால்" செயல்படக்கூடியது. இது குற்றஞ்சாட்டும் வகையில் உலக விசயங்களை நடப்பு அரசாங்கம் மற்றும் கார்ப்பரேசன்கள் மூலமாக கட்டுப்படுத்துதலைக் குறிப்பிடுகிறது. பொதுவாக பவரிய இல்லுமினாட்டியின் நவீன அவதாரம் அல்லது தொடர்ச்சியாக இது இருக்கிறது. இந்தச் சூழமைவில்   இல்லுமினாட்டி   பொதுவாக புதிய உலக வரிசையைக் (NWO) குறிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. பல சதித்திட்ட தத்துவ அறிஞர்கள் அது போன்ற புதிய உலக வரிசையை நிறுவுவதற்கு தலைமை வகிக்கும் நிகழ்வுகளின் பின்னணியாக இருக்கும் கூர்ந்த...

கடலுக்கு அடியில் இருக்கும் தமிழனின் வரலாறு குமரிக்கண்டம் (kumari kandam) & Lemuria

Image
குமரிக்கண்டம்                                              (kumarikandam)&Lemuria குமரிக்கண்டம்   (kumari Kandam)  என்பது  இந்தியப்  watch on the video: https://youtu.be/WqQ7cxkxueI பெருங்கடலில்  அமைந்துள்ள  இந்தியாவின்  தெற்கே இருந்ததாகக் கருதப்படும் இழந்த ஒரு கண்டத்தைக் குறிக்கிறது  [1] . இது பண்டைய  தமிழர்  நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிஞர்களின் ஒரு பகுதியினர் இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம் இருந்திருக்கலாம என்று ஊகித்தனர்.  ஆபிரிக்கா ,  ஆத்திரேலியா ,  இந்தியா  மற்றும்  மடகாசுகர்  நாடுகளுக்கு இடையே காணப்படும் புவியியல் மற்றும் பிற ஒற்றுமைகளை தொடர்புபடுத்தி விளக்க முயன்றபோது அவர்களுக்கு இச்சிந்தனை தோன்றியது....